தமிழ் இனிது
Author: நா.முத்துநிலவன்Publisher: இந்து தமிழ் திசை
₹160.00 Original price was: ₹160.00.₹155.00Current price is: ₹155.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்படும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: இந்து தமிழ் திசை
₹160.00 Original price was: ₹160.00.₹155.00Current price is: ₹155.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹160.00 Original price was: ₹160.00.₹155.00Current price is: ₹155.00.
Year |
---|
தமிழுக்கும் இளந்தலைமுறைக்கும் இடையே விழுந்துள்ள இடைவெளி வேதனை அளிப்பதாக உள்ளது. நாற்பதுகளில் இருப்போரிடம்கூட ஒற்றுப்பிழைகளும் மயங்கொலிப் பிழைகளும் காணப்படும்போது, இளைஞர்களின் நிலையைத் தனியே குறிப்பிடத் தேவை இல்லை. இனியும் இந்நிலை தொடரக் கூடாது; அரசு வேலையின் பொருட்டாவது தமிழ் மொழியில் குறிப்பிட்ட அளவுக்கு அவர்கள் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்கிற வரவேற்கத்தகுந்த நிலை தமிழக அரசால் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இளைஞர்கள் கசப்பு மருந்தாகக் கருதி ஒதுக்கிவரும் தமிழ் மொழியின் இனிமையான கூறுகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் அவர்களுக்கு நேரும் வாடிக்கையான பிழைகளை நட்பார்ந்த ஆசிரியரின் உரிமையோடு திருத்தவும் ’இந்து தமிழ் திசை’ நாளிதழில் ஒரு தொடர் வெளியானது. ‘திசைகாட்டி’ இணைப்பிதழில் ஜூன், 2023இல் தொடங்கி 50 வாரங்கள் வெளிவந்த ‘தமிழ் இனிது’ தொடர் அந்தத் தேவையை மிகச் சிறப்பாக நிறைவேற்றியது. அதை எழுதிய கவிஞர், ஆசிரியர், தமிழ் ஆர்வலருமான நா. முத்துநிலவன் காட்டிய அக்கறைதான் இதற்குக் காரணம். அறிவொளி இயக்கத்தைக் கட்டமைத்தவர்களில் ஒருவர்; தமிழ்நாடு அரசு பாடநூல் குழுவில் பங்குபெற்றுச் செயல்பட்டவர்; கல்விமுறை, தமிழ் இலக்கணம் சார்ந்து நூல்கள் எழுதியவர் என முத்துநிலவனுக்குப் பல பரிமாணங்கள். அத்தனை பரிமாணங்களையும் அவரின் தமிழ் வேட்கைதான் தாங்கிப்பிடிக்கிறது. அவரது தொடரின் ஒவ்வொரு இயலும் அளவான சொற்களில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. பள்ளி, கல்லூரி மாணவர், வேலை தேடும் இளைஞர், நடுத்தர வயதினர், பணி ஓய்வு பெற்றோர், ஏன்… ஊடகத் துறையில் பணிபுரிவோர் உள்படப் பல நிலைகளில் இருப்போரின் பற்றாக்குறை அறிந்து அவர்களுக்குச் சுமையாகாத விதத்தில் இந்நூலில் இலக்கணப் பாடம் நடத்தியிருக்கிறார் முத்துநிலவன். சித்தரிப்பா – சித்திரிப்பா?, கடைப்பிடி – கடைபிடி எது சரி?, திருவளர் செல்வன் – திருநிறை செல்வன் வேறுபாடு என்ன? ஆர்க்காடு – ஆற்காடு இரண்டும் உணர்த்தும் பொருள்கள் என்ன – இப்படி எழுதும்போது பலருக்குக் கேள்விகள் நெருடும். அன்றாட வாழ்வுடன் பின்னிய உதாரணங்களுடன் அவற்றுக்கு அவர் விடை அளித்துள்ளார்.
Be the first to review “தமிழ் இனிது” Cancel reply
Related products
கட்டுரை
கட்டுரை
கட்டுரை
Reviews
There are no reviews yet.