உயிர்த் தேன் (Uiyir Then)

Author:

275.00

தி.ஜானகிராமன் நாவல்களில் மிகுந்த இலட்சியவாதத்தன்மை கொண்டது உயிர்த்தேன். பெண் நிலையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும் இதுவே. பெண் மனதின் இருநிலைகள் அனுசுயாவும் செங்கம்மாவும். அனுசுயா வெளிப்படையானவள். தனது இருப்பை கருத்துகளால் விளங்கிக்கொண்டவள். பெண்ணியல்பின் புறம் அவள். செங்கம்மா அந்தரங்கமானவள். வாழ்வை உணர்வின் தீவிரத்தால் அடையாளம் காண்பவள். பெண்ணியல்பின் அகம் அவள். இவ்விரு நிலைகளிலிருந்தும் மனிதர்களை நேசிப்பது தங்களது பிறவிப் பொருளாகக் கருதும் புள்ளியில் இருவரும் இணைகிறார்கள். அன்புக்கும் மானுடப் பரிவுக்கும் காதலுக்கும் அகம் என்றும் புறம் என்றும் பேதமில்லை என்பதை தமது செயல்களால் நிறுவுகிறார்கள். அந்த அன்பு ஆண்களை தோழமை கொள்ளச் செய்கிறது, மதிக்கச் செய்கிறது, உன்மத்தம் பிடிக்கச் செய்கிறது, கொல்லத் தூண்டுகிறது, தற்கொலைக்கும் உந்துகிறது.

Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்படும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
SKU: b23875d8c78a Category: