றா
Author: லார்க் பாஸ்கரன்
₹180.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்படும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹180.00
Format | Paperback |
---|---|
Language | Tamil |
தோழர் லார்க் பாஸ்கரனின் கவிதைகளில் ஒரு மிதமான கவிதைக் கற்பனையே அதிகம் வெளிப்பட்டு நிற்கின்றன. கவிதைச் சம்பவங்களும் குறைந்தளவே தென்படுகிறது. ஆயினும், அவரின் கவிதைச் சம்பவங்களை இணைத்து கதைக் கவிதையாக மாற்றும் போது, மனதிற்குள் ஒரு திரையிடல் நடந்தேறுகிறது. இந்த வகைப்போக்கையே இன்னும் ஆழமாக வளர்த்தெடுத்தால், தனக்கான தனித்து ஒரு கவிதை சொல்லலை நோக்கி நகரலாம் என நினைக்கிறேன். தனியான கவிதை சொல்லலை நோக்கி நகருவது அத்தனை இலகுவானதல்ல. தமிழ் கவிஞர்களில் எவரும் தனித்த போக்கை கொண்டவர்களல்ல. அது சாத்தியமும் இல்லை. எனினும், தனித்தன்மை நிரம்பியதாக உணரச் செய்யும் கவிதைப் பிரதிகளை கண்டடையலாம் என நினைக்கிறேன்.
ரியாஸ் குரானா
கவிஞனின் சமகால கவிதை முகம் இப்படி கிளம்பி ரெக்கையடிப்பதற்கு அவருக்குள் ஓராயிரம் காயங்களின் பறவைகள் கூடு கட்டி வாழ்ந்திருக்கலாம் அல்லது சூழலிய தாக்கமாக கூட இருக்கலாம். இவரின் கவிதைளை ஊடுருவிப் பார்த்த போது மேய்சல் நில உப்பு, ஆன்மாவின் காயங்கள், ஆயுள் ரேகை, முகங்கள், பிரதி, அகால நினைவுகள் எனப் பல பிரதிகள் வாசகனின் நினைவின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் வரம் பெற்றவை. ‘றா’ கவிதைகள் புதிய அரசியல் வரலாற்றை பேசி நிற்பதோடு தனிமையின் ஏக்கங்களுக்கு ஒளடதமாகவும் கவிதை சார்ந்த தளத்தில் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றன. சமகால தமிழ் கவிதைச் சூழலில் தொடர்ந்து இயங்குவதனூடாக கவிதைப்புலத்தில் முக்கியமான ஒருவராக மாறிவிடலாம்.
ஏ.நஸ்புள்ளாஹ் இலங்கை.
சில வேளை மொழியை இழந்து வாழ்வதும் பிடித்தமானதாக இருக்கிறது. சமீபமாக சாலைகளில் சிறகுகளோடு பறக்கிறேன். வானத்தில் பாதங்களால் நடக்கிறேன். மனிதர்களும் பறவைகளும் மொழியும் அர்த்தங்களும் தடுமாற இயங்கும் ஒரு உயிரியை தான் படைக்கவில்லையே! கடவுள் குழம்பிப்போகிறார். இது ஏதோ மிகையதார்த்தம் அல்ல. யதார்த்தத்தை பரிசோதித்துப் பார்ப்பதற்கு உதவுகிற கற்பனை. அல்லது, வழக்கமான ஒரு அமைப்பிலிருந்து விலகி வழக்கம்,
அல்லாத ஒன்றை தொடர்வதற்கான முயற்சி. அல்லது, புதிய ஒன்றைச் சிந்திப்பதற்காக வழமையான ஒரு விசயத்தை விடுவிப்பது என எடுத்துக் கொள்ளலாம். லார்க் பாஸ்கரனுடைய’றா’கவிதைத் தொகுப்பை வாசிக்கிறேன். ஒவ்வொரு கவிதையும் சால்வடார் டாலி, ரெனே மாக்ரிட், லியோனோரா கேரிங்டன் போன்றோரின் சர்ரியலிஸ ஓவியங்கள் போல் இருந்தது.
R.கரிகாலன்
Be the first to review “றா” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
Reviews
There are no reviews yet.